கதை : தெலுங்கு படம். வசனம் :ராம.சேஷன்,அந்தோணி பாக்யராஜ்,சவரி முத்து, ஒளிப்பதிவு :ஆர்.கணேஷ்,இசை : ஜி.வி.பிரகாஷ்குமார், இயக்கம்.: எம்.எம். சந்திர மவுலி.
ஜி.வி.பிரகாஷ்குமார்,யுவன்மயில்சாமி,நாசர்,தலைவாசல் விஜய்,தம்பி ராமையா, ஆர்.வி.உதயகுமார்,அப்புக்குட்டி, மனோபாலா,ஷாலினி பாண்டே,ரேகா, ஜெயசித்ரா,ஷிவானி பட்டேல்,
***************
தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய படத்தின் ரீ மேக் தான் 100 ./. காதல்.
படிப்பிலும் தொழிலிலும் நம்பர் ஒன்னாக இருக்கவேண்டும் என்று நினைப்பது தவறில்லை. தன்னைப் போலதானே பிறரும் நினைப்பார்கள், அப்படி அத்தை மகளே நினைத்தால் என்னாகும்? அதுவும் போட்டி போட்டுக் கொண்டு !
இதுதான் நூறு சதவீத காதல்.!
தொடக்கமே மாப்பிள்ளை கோலத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் பாருக்கு தண்ணி அடிக்க வருகிற காட்சி. சக குடிகாரர்கள் “என்னய்யா இந்த கோலத்தில் இங்க வந்திருக்கே .போய்யா திரும்பி!”என்று வற்புறுத்துகிற போதுதான் பிளாஷ் பேக் ஆரம்பம்.
ஜி.வி.பி.படிப்பில் கெட்டி .எதிலும் பர்ஸ்ட் .அந்த திமிர் அதிகம்.மாமா மகனை மனதில் வைத்துக்கொண்டு படிக்க வரும் ஷாலினி பாண்டேக்கு படிப்பு அவ்வளவாக வராது.அவளது நெருக்கத்தை இன்பாச்சுவேஷன் என சிக்மன்ட் பிராய்டு தியரியை சொல்லி சொல்லி ஜி.வி.பி. சரிக்கட்டப் பார்த்தாலும் உள்ளுக்குள்ளே ஒரு ஈகோ. இதுதான் கதையை இ….ழு….க்…கி….ற….து.!
இதுவரை ஜி.வி.பிரகாஷ் நடித்த படங்களில் இந்த படத்தில்தான் களைத்துப் போகும் அளவுக்கு நடித்திருக்கிறார். ஷாலினி பாண்டே அந்த காலத்து வாணி ஸ்ரீ மாதிரி புருவத்துக்கு அடர்த்தியாக மை .கதைக்குத் தேவையான அளவுக்கு உழைப்பு. ஓவர் டைம் தேவைப்படல! ஜாலியான கேரக்டர்.காமடியுடன் !
பாட்டி ஜெயசித்ராவோ அதுக்கும் மேல ! ஹீரோயின் ரேஞ்சுக்கு மேக் அப். ஓவர்டா சாமி! உதட்டுக்கு லிப்ஸ்டிக் அநியாயம்.பழைய நெனைப்புடா பேராண்டி கதை! இந்த கேரக்டரே தேவையில்லை. வீல் சேரில் உட்கார்ந்தபடி ஆசிர்வாதம் பண்றதுக்கு இவர் தேவையா?ஒரு கட்டத்தில் நாசர் கிண்டலடிப்பது சரியாகவே இருக்கிறது.!
மயில்சாமியின் வாரிசு யுவன். பரவாயில்லை.கதாநாயகி கிடைப்பார் என்று நினைத்து ஏமாந்து போகிற வேலை. நல்லவேளை வில்லனாக நினைக்கவில்லை.
தம்பி ராமையா குணசித்திரம் என்றால் உருக வைப்பார். காமடி என்றால் எந்த ரேஞ்சுக்கும் இறங்கி விடுவார். இதில் அமெரிக்க ரிட்டர்ன் உறவுக்காரர்.
தலைவாசல் விஜய்-ரேகா கச்சிதம்.
படத் தொகுப்பு மு.காசிவிஸ்வநாதன். ??
ஒளிப்பதிவு ஆர் .கணேஷ். பேக் புரோஜக்ஷன் காட்சியை இந்த படத்தில் தெளிவாகவே பதிவு செய்திருக்கிறார்.
படம் எப்படி?
சினிமா முரசத்தின் மார்க். 2 / 5