நடிகர் அஜித்குமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு ‘ஆரம்பம்’ படத்தில் கார் துரத்தல் மற்றும் சண்டை காட்சியில் நடித்தபோது, அவருடைய வலது முழங்கால் முறிந்து,, தோள்பட்டையிலும் பலத்த காயம் ஏற்பட்டது.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். காலில் ஸ்டீல் ராடுகள் பொருத்தப்பட்டது. அஜித் குணமடைந்தாலும் அவருக்கு அடிபட்ட இடத்தில் அடிக்கடி வலி ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து டாக்டர்கள் ‘ஸ்கேன்’ எடுத்து பார்த்தார்கள். அடிபட்ட இடங்களில் மீண்டும் ‘ஆபரேஷன்’ செய்துகொண்டால்தான், முழுமையாக குணமடைய முடியும் என்று அஜித்குமாரிடம் டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள் இந்நிலையில் ‘வேதாளம்’ படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் பாடல் காட்சியில் அவர் கலந்துகொண்டு நடித்தபோது, ஏற்கனவே அடிபட்ட இடத்தில் மீண்டும் அடிபட்டது. மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். வலியினால் துடித்த . அவருக்கு உடனடியாக ‘ஆபரேஷன்’ செய்யவேண்டும் என்று டாக்டர்கள் முடிவு செய்தனர். வருகிற 24–ந்தேதி அவருக்கு ‘ஆபரேஷன்’ நடைபெற இருந்தது. இந்நிலையில்,திடீரென்று நேற்று மாலை வலி அதிகமானதை தொடர்ந்து அஜித் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.இதையடுத்து நேற்றிரவு அவருக்கு ‘ஆபரேஷன்’ நடந்தது. அவருடைய வலது முழங்காலிலும், தோள்பட்டையிலும் அறுவை சிகிச்சை நடைபெற்றது. ஆபரேஷனுக்கு பின் அஜித்குமார் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தார்கள்.தொடர்ந்து அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் குடும்பத்தினர் அருகில் இருந்து அவரை கவனித்து வருகின்றனர்.