“இந்தியாவில் இன்னமும் இனப்படுகொலைகள் நடக்கின்றன.தடுத்திட ஆவண செய்யுங்கள்” என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதால் இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 அறிஞர் பெருமக்கள் மீது வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது.அதுவும் தேசத் துரோக வழக்கு.
அந்த குற்றச்சாட்டையே மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனும் சொல்லியிருக்கிறார்.
“தமிழகத்தில் அலட்சியக்கொலைகள் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இரங்கல் தெரிவித்துக் கொண்டிருப்பதற்காக மட்டுமே நாம் இங்கு இல்லை. இதை நிறுத்தவைப்பது நமது கடமை. அரசின் அலட்சியம் அக்கறையாக மாற வேண்டும்.”என்பதாக சொல்லி இருக்கிறார்.
அப்படியானால் அவரையும் கைது செய்வார்களா?