உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ்-3 நிகழ்ச்சி தமிழகம் தாண்டியும் மிக பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சிஇன்றோடு(அக்.06) முடிவடைகிறது. இதில் உலகநாயகனின் கைகளால் பிக்பாஸ் வின்னர் பட்டத்தை கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பிக்பாஸுக்கே பிடித்த சாண்டியா, அல்லது பெருமளவில் இளைஞர்களை ஈர்த்த லாஸ்லியாவா, எதையுமே டேக் இட் ஈஸி எடுத்துக்கொள்ளும் ஷெரீனா, பெரும்பாலான கல்லூரி மாணவிகளின் ஹீரோவாக வலம் வரும் முகேனா… யார் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் பட்டிமன்றமே நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பிக்பாஸ் வின்னர் யார் என்பதன் அறிவிப்பு இன்று இரவு வெளியிடப்பட்டு விடும்.
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரம் திரையுலக பிரமுகருமான ஜே.எஸ்.கே.கோபி தன் டுவிட்டர் பக்கத்தில் முகென் தான் வின்னர் என அறிவித்துள்ளார்.
இது தமிழக மக்களிடையே வைரலாகி வருகிறது.