இசை ஞானி இளையராஜா-இளைய நிலா பாலு இருவரும் இப்போதுதான் சமாதானம் ஆகி சேர்ந்திருக்கிறார்கள்.
அவர்களது நட்புக்கு சில சினிமாக்காரர்கள் ஆப்பு வைத்துவிடுவார்கள் போலிருக்கிறது.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கலந்து கொண்ட ஒரு இசை நிகழ்ச்சியில் கவுரவ பேச்சாளர்களாக கலந்து கொண்ட சினிமா பிரபலங்களில் காமடி நடிகர் செந்திலும் ஒருவர்.
மேடை ஏறிய செந்தில் பாடகர் எஸ்.பி.பியை பார்த்து “உங்களுக்கு பணம் கொடுப்பவர்கள் யார்” என்று கேட்டார்.
“தயாரிப்பாளர்கள்!” என்றார் பாலு.
“அவர்களுக்கு கொடுப்பது யார் “என செந்தில் கேட்க ,அதற்கு என்ன பதில் சொல்வது என புரியாமல் பாலு சற்று தயங்க செந்திலே கூட்டத்தினரைக் காட்டி “பொது மக்கள்”என சொன்னார் .அதை பாலுவும் ஆமோதித்தார்.
“மக்கள்தான் தயாரிப்பாளர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். அதனால் உங்கள் பாட்டு மக்களுக்குத்தான் சொந்தம்.”என வம்புக்கு விதை போட்டு விட்டார் செந்தில் .
“எனது பாட்டுகள் எனக்குத்தான் சொந்தம் “என்று இளையராஜா நோட்டீஸ் விட்டு உரிமை கொண்டாடி வருகிற நேரத்தில் செந்தில் இப்படி பேசியிருப்பது முணுமுணுக்க வைத்திருக்கிறது.
எஸ்.பி.பாலு மற்றும் சிலர் சேர்ந்து மாதம் தோறும் முப்பது நலிந்த இசைக் கலைஞர்களுக்கு நிதி உதவி செய்து வருகிறார்கள் என்பது கூடுதல் செய்தி.