காஜல் அகர்வாலை கூப்பிட்டு பேசினாங்க. லம்பா சம்பளம் தர்றேன்னு செக்கை நீட்டுனாங்க.
கதை கேட்டார் .பிடிச்சிருந்தது.
“எத்தனை நாள் கால்ஷீட் வேணும்?”
“நாப்பது நாள் மேடம்!”
“ஒகே.!லொக்கேஷன் எங்கே பாஃரீனா ?”
“இல்லிங்க மேடம்.நம்ம கர்நாடகா காட்டுக்குள்ள, நாப்பது நாளும் அடர்ந்த அந்த காட்டுக்குள்ளதான்!”
“ஓ..அப்படியா “என்று கேட்டு விட்டுப் போனவர்தான் காஜல்.அதுக்குப் பிறகு பேச்சே இல்ல.
அடுத்து ராஷி கன்னா!
“அம்மாடி !காட்டுக்குள்ளேயா ? எனக்கு பாதுகாப்பே இல்லை. நமக்கு சரிப்பட்டு வராது .நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன் .ஆளை விடுங்க.”என்று கழண்டு கொண்டு விட்டார்.