கார்த்தி நடிக்கும் கைதி படத்தின் முன்னோட்ட விழா நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. பல பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.
வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பது கார்த்தியின் வழக்கம்.
இந்த கைதி கதை எப்படி மாட்டியது?
“தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு என்னிடம் ரொம்ப நாளா இவர் இந்த கதையை சொல்லிட்டு இருக்கார்.நீங்க கொஞ்சம் கேளுங்க என்று டைரக்டரை அனுப்பி வச்சார். கேட்டேன். கதை பிடிச்சிருந்தது. உடனே ஒத்துக்கிட்டேன். இது ஒரு நாள் இரவில் நடக்கிற கதை.பாடல் இல்லை.கதாநாயகி இல்லை. 10 வருஷம் ஜெயிலில் இருந்து வெளியே வரும் ஒருவனை, அவனைச் சுற்றி நடக்கிற சம்பவங்களே இந்த கதை. நான் ஹாலிவுட் பாணி கதைகளை விரும்புறேன் என்றால் அது கமல் சாரிடம் இருந்து வந்த பழக்கம்.” என்றார் கார்த்தி.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ள நடிகர் நரேன் பேசும்போது, “பொதுவாக நீண்ட டயலாக் உள்ள ‘சீன்’னா ‘வைட்’ ஆங்கிள்ல எடுப்பாங்க. ஆனா இந்த படத்தில 3 நிமிஷம் கார்த்தி பேசுற சீனை குளோசப் ஷாட்லயே எடுத்திருக்காங்க. ஆச்சரியமா இருந்தது “என்றார்.