“ஏய் எனக்கு நம்பிக்கை இல்லப்பா, தனுஷ் படம். தூக்குனாலும் தூக்கும் .கவுத்துனாலும் கவுத்தும்.எதுக்கு ரிஸ்க் ?” என்று ஓரம் கட்டினார்கள் விநியோகஸ்தர்கள்.
தயாரிப்பாளர் தாணுவுக்கு தனுஷ் . தேர்வு செய்த கதை ,டைரக்டர் வெற்றி மாறன் ஆகியோர் மீது அவ்வளவு நம்பிக்கை. பாக்ஸ் ஆபீஸ் தெறிக்கும் என்கிற நம்பிக்கை இருந்தது.இந்த குதிரைதான் ஜெயிக்கும் என்கிற நம்பிக்கை இருந்ததால் அசுரன் மீது நல்ல தொகையை வைத்தார்.
ஆனால் விநியோகஸ்தர்களுக்கு ரெண்டு மனசு.
இதனால் தமிழகம் முழுவதும் தாணுவே வெளியிட்டார்.
அசுரன் அவனது பலத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறான் .வசூல் மழை. பாக்ஸ் ஆபீஸ்ல தெறிக்கிது.30 கோடி வரை ஷேர் கிடைக்கும் என்கிறார்கள். இன்னும் சாட்டிலைட்,டிஜிட்டல்,வெளிநாட்டு உரிமை இவ்வளவு இருக்கு.
ஏமாந்துட்டோமே.. நல்ல வாய்ப்பை தவற விட்டுட்டோமே என இனி புலம்பி என்ன பயன்?