மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ படத்தில் மக்கள் திலகமாக மோகன்லால் , கலைஞராக பிரகாஷ் ராஜ் இருவரும் நடித்திருந்தார்கள்.
விமர்சகர்கள் பாராட்டினாலும் அரசியல் காரணமாக படம் வெற்றியைப் பெற வில்லை.
படத்தில் இருவருமே சிறப்பாக நடித்திருந்தார்கள் என்றாலும் கருணாநிதியாக நடித்திருந்த பிரகாஷ்ராஜ் வசனத்தை மிக சிறப்பாக பேசி நடித்திருந்தார்.அடுக்கு மொழியை அழகாக உச்சரித்தார்.
தற்போது முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் வாழ்க்கைப் பதிவை படமாக்க இருக்கிறார்கள்.
கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிக்க எம்.ஜி.ஆராக அரவிந்த சாமி நடிக்க அண்மையில்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஜெ.வாழ்க்கையில் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்தவர் கலைஞர். இவரது கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.பிரகாஷ் ராஜா அல்லது புதியவர் யாராவதா ?
இயக்குனர் ஏ எல் விஜய்தான் சொல்லவேண்டும்?