தேசிய விருதுகள் பெற்றவர் நடிகை ஷோபனா. தன்னுடைய வாழ்க்கையை நடனத்துக்கு அர்ப்பணித்திருப்பவர்.
மணமாகவில்லை. காரணம் காதல் தோல்வி என கதை சொன்னார்கள். சென்னையில் நடனப்பள்ளி நடத்தி வரும் ஷோபனா ஒருபெண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்தார். அந்த குழந்தையும் வளர்ந்து ஆளாகி விட்டது.
அவர் தமிழில் கடைசியாக நடித்த படம் சிம்புவின் போடா போடி. 2012-ல் வந்தது. மலையாளத்தில் கடைசியாக நடித்தது 2013.
ஆக ஆறு வருட இடை வெளிக்குப் பிறகு சினிமாவுக்குத் திரும்பி இருக்கிறார். சுரேஷ் கோபியுடன் நடிக்கவிருக்கிற அந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.அனுப் குமார் டைரக்ஷன் .
துல்கர் சல்மான் தயாரிக்கிற இந்த படத்தில் கல்யாணி பிரியதர்சனும் நடிக்கிறார்.