மைக்கேல் கோர்செல். ஸ்ருதிஹாசனின் ஒரு காலத்திய நண்பர். காதலர். அவரை சென்னைக்கு அழைத்து வந்து அப்பா உலகநாயகன் கமல்ஹாசனுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.ஒரு கல்யாண நிகழ்ச்சிக்கு அந்த வெள்ளைக்காரரை பட்டு வேட்டி சட்டையில் அழைத்து வந்திருந்தார்கள்.
இப்படியெல்லாம் வளர்ந்ததுதான் ஸ்ருதியின் காதல்.!
திடீரென அவர்களது நட்பில் விரிசல் ! அமைதியாக விலகி விட்டார்கள்.
இந்த முறிவு ஏன்?
“நான் கூல் டைப். மிகவும் இன்னசண்ட்.ஆனால் எமோஷனல் டைப். எளிதாக நம்பி விடுவேன்.ஆனால் நல்ல அனுபவம் கிடைத்து இருக்கிறது.பிரிவுக்காக நான் வருத்தப்படவில்லை.உண்மையான அன்பு கிடைக்கும் வரை காத்திருப்பேன்” என்கிறார் உலகநாயகனின் மகள்.