விடிகாலை எந்திரிச்சா பல்ல விளக்கி பாத்ரூம் போயிட்டு யோகாசனம் பண்ணுங்கடா நோய் நொடி வராதுன்னு சொன்னா சுகர் பேஷன்ட் யாராவது கேக்கிறாங்களா?
இங்க பாருங்க நம்ம டைரக்டர் அட்லியும் பொஞ்சாதியும் எவ்வளவு அக்கறையா யோகாசனம் பண்ணுறாங்க. இதுக்கு பேரு தெரியாதுங்க. ஆனா அந்த காலத்தில தொம்ப கூத்தாடிகள்னு சொல்வாங்க. அவங்க வயித்துப் பாட்டுக்காக இந்த மாதிரி செய்வாங்க. கூட்டம் கூடி நின்னு வேடிக்கை பாக்கும்.அப்பல்லாம் இது யோகாசனம்னு தெரியாது. மூங்கில கையில ஏந்தி பச்ச குழந்தையை அதன் உச்சியில நிப்பாட்டி செய்றதெல்லாம் ஒரு வகை யோகாசனம்தான்னு இப்பதான் தெரியிது.