“மதத்தின் பெயரால் நாடு முழுக்க கொலைகள் நடக்கிறது.அராஜகம் தலை விரித்தாடுது.அதை கட்டுப்படுத்துங்க சாமி”ன்னு பிரதமருக்கு கடுதாசி போட்டா குத்தமா ராசா”ன்னு குப்புசாமி கேட்ட கேள்விக்கு இப்ப பதில் வந்துருக்கு.
கடிதத்தில் கையெழுத்துப்போட்ட இயக்குனர் மணிரத்னம்,நடிகை ரேவதி,அனுராக் கஷ்யப் உள்ளிட்ட 49 பேர் மீதும் தேசத்துரோகம் செய்ததற்கான எந்த முகாந்திரமும் இல்லை என சொல்லி முசாபர்பூர் போலீஸ் அதிகாரிகள் வழக்கை தள்ளுபடி செய்து விட்டார்கள்.
அதாவது நியாயத்தை கேட்டு பிரதமருக்கு லெட்டர் எழுதியவர்கள் இந்த நாட்டின் குடிமக்கள். மக்களின் அபிமானத்தைப் பெற்றவர்கள் எந்த விதமான அரசியல் நோக்கமும் இல்லாமல் நாட்டின் நலன் கருதுகிறவர்கள் .அவர்களை யாரோ ஒரு ஆள் தேசத்துரோகி என சொல்லி விட்டால் அதை நம்பி வழக்குப் பதிவு செய்கிறார்கள் என்றால் ?
இதுதான் ஜனநாயகமா?