இந்த படத்தில் இருப்பவர்கள் சாதாரணமானவர்கள் அல்லர்.
அடர்ந்த காடு. சலசலத்து ஓடும் நீரோடை.!ரம்மியமான சுத்தமான காற்று.! மக்கள் நடமாட்டம் இல்லை. மாலைப் பொழுது. மஞ்சள் வானம்.
அந்தப் பெண்ணின் பெயர் மாதவி.வயது 26. உடல் பயிற்சி ஆசிரியை.
அவரது பெயர் சிவபிரசாத். எம்.பி.ஏ.பட்டதாரி ஒரு கல்லூரியின் கரஸ்பாண்டட் . சமூகத்தின் பார்வையில் இருவருமே வெவ்வேறு சாதி.
பள்ளிப் பருவத்து நட்பு. பருவத்தில் காதலாக மாறியது.
மாதவி ஒய்.எஸ்.ஆர்.கட்சி எம்.பி.ஆனார்.
இருவரும் மணம் செய்து கொள்ள விரும்பினர். சாதிகள் தடை இல்லை.
இருவரும் வனப்பகுதிக்கு சென்று மனம் விட்டுப் பேசினர்.
பட்டதாரி தன்னுடைய காதலியிடம் புரபோஸ் பண்ணுகிற காட்சியை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்கள்.
இன்னும் எத்தனை நாள்தான் அடைபட்டு கிடப்பது? காதலுக்கு பதவி தடவை இல்லை. வானில் சிறகடித்து பறந்து செல்லுங்கள்.