மிருகம் டைரக்டர் சாமி நடிகை அமலா பாலை வைத்து சிந்துவெளி படத்தை இயக்கியவர். மாமனாரை மருமகள் அமலாபால் மடிக்குள் போட்டுக் கொண்ட கதை. இதற்குப் பின்னர் அவர் செய்த கங்காரு படம் அவ்வளவாக போகவில்லை. இன்றளவும் அவர் சும்மாதான் இருக்கிறார். காண்டர்வர்சியல் டைரக்டர் என பெயர் வாங்கிய இவர் தற்போது தொட்டிருப்பது தளபதி விஜய்யை.!
எந்த காரணத்துக்காக இந்த அசுரத் தாக்குதல் என்பது தெரியவில்லை.
தளபதியின் ரசிகர்கள் எந்த அளவுக்கு பொறுத்துப் போவார்கள் என்பது தெரியவில்லை.
“ரசிகர்களுடன் கைகளை குலுக்கி விட்டு போட்டோக்கள் எடுத்து முடித்த பிறகு கிருமி நாசினி சோப்பு போட்டு கையக் கழுவுகிறார் விஜய்.
அவரது சம்பாத்தியத்தை கறுப்புப் பணமாகத்தான் வாங்குகிறார்.அதனால் அவர் மிஸ்டர் கிளீன் மாதிரி பேசக்கூடாது.
விஜய், ஜனங்களிடம் நடிக்காதீர்கள். படங்களில் மட்டுமே நடியுங்கள் ரஜினி மாதிரி படங்களில் மட்டும் நடியுங்கள்!”
இவைதான் சாமியின் கருத்து!