ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்படம், வரும் பொங்கலன்று வெளியாக உள்ளது.மும்பையில் இப்படத்தின் படப் பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து வந்த இப்படத்தின் படப் பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.இதையடுத்து அவர் சென்னை திரும்பினார்.
ரஜினிகாந்த் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பினார்.அடுத்தது ரஜினி அரசியல் குறித்து அறிவிப்பார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், இயக்குனர் சிறுத்தை சிவா, கூட்டணியில் ரஜினியின் அடுத்த பட அறிவிப்பு வெளியானது.
ரஜினிகாந்த் ஒவ்வொரு படத்தின் படப் பிடிப்பு முடிவடைந்ததும் இமயமலைக்கு செல்வது வழக்கம். அங்கு சென்று திரும்பிய பின்னர் தான் புதிய படஅறிவிப்புகள் மற்றும் முக்கிய முடிவுகள் எடுப்பதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால்,ரஜினி. உடல்நலக் குறைவு சிகிச்சைக்கு பின்னர் அவர் இமயமலை பயணத்தை கைவிட நேர்ந்தது. இதையடுத்து கடந்த 8 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் 2018 -ல் ‘காலா’, ‘2.0’ ஆகிய படப்பிடிப்பு வேலைகள் முடிந்ததும் இமயமலை பயணம் மேற்கொண்டார்.
அங்கு அவர் தனது சொந்த செலவில் புதிதாக கட்டிக் கொடுத்துள்ள குருசரண் ஆசிரமத்தை பார்வையிட்டார். அங்கு அவர் 2 நாட்கள் தங்கினார். இந்நிலையில், இயக்குனர் சிறுத்தை சிவா, கூட்டணியில் ரஜினியின் புதிய பட பட அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், மீண்டும் தற்போது மீண்டும் இமயமலை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
சென்னையில் இருந்து இன்று காலை 6.40 மணிக்கு விமானத்தில் ரஜினி, இமயமலை புறப்பட்டுச் சென்றார். நேராக டேராடூன் செல்லும் அவர் அங் கிருந்து அடுத்தடுத்த இடங்க ளுக்கு காரில் செல்கிறார்.
இந்த ஆன்மிக பயணத்தில் கேதார் நாத், பத்ரிநாத் ஆகிய இடங்களுக்கு அவர் செல்கிறார். துவாரா ஹாட் குருசரண் ஆசிரமத்தில் 3 நாட்கள் தங்கி, அடுத்து பாபாஜி குகைக்கு செல்லவும் திட்டமிட் டுள்ளார்.10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியதும் சிறுத்தை சிவா படத்தில் ரஜினி நடிப்பது குறித்தும் தனது அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தும் அறிவிக்க உள்ளார் என்கிறார்கள்.