தயாரிப்பாளர்கள் ரொம்பவே தவியாய் தவித்துப் போய் இருக்கிறார்கள்.
தன்னிச்சையாக சுதந்திரமாக செயல்பட வேண்டிய அமைப்புகளை தன்னுடைய கொடுங்கரங்களுக்குள் கொண்டு வருவதற்கு அரசு கையாளும் முறைகளால் விழி பிதுங்கி நிற்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.இவர்களை வழிக்குக் கொண்டு வருவதற்காக தனது ஆதரவு தயாரிப்பாளர்களை உள்ளே இறக்கி விட்டிருக்கிறது.
எங்கே அடித்தால் வலிக்குமோ அங்கே அதாவது அடி வயிற்றில் அடி விழுகிறது.
கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது மிக மிக அவசரம்படம்தான்.
தியேட்டர்களை கன்பர்ம் பண்ணிய பிறகுதான் லிப்ரா சந்திரசேகரன் விளம்பரம் கொடுத்தார் ,ஆனால் அதே நாளில் வேறு படங்கள் வருவதாக சொல்லி தமிழகம் முழுவதும் 17 தியேட்டர்களை மட்டுமே ஒதுக்கினார்கள் தியேட்டர் அதிபர்கள்.அல்லது தியேட்டரை குத்தகைக்கு எடுத்துக் கைக்குள் வைத்திருப்பவர்கள்.
இயக்குநர் இமயம் பாரதிராஜா கொதித்துப் போய் “பிரசவ நேரத்தில் வயிற்றை தடி கொண்டு தாக்குகிறீர்களே பாவிகளா ?”என நொந்து போய் அறிக்கை விட்டிருக்கிறார்.
இதற்கிடையில் இன்று தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த 300 பேர் வடபழனியில் ஒன்று கூடி பேசி வருகிறார்கள். இந்த கூட்டத்தில் வி.சேகர்,ராதாகிருஷ்ணன், ஆர்.வி.உதயகுமார்,பிரி மூஸ் தாஸ், ஜாகுவார் தங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசி வருகிறார்கள். கார சார விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
தயாரிப்பாளர்கள் சங்கம் தேர்தலை நடத்துவதற்காக முதல்வரை சந்திக்க வேண்டும் என்பதற்காக இந்த கூட்டம் என்கிறார்கள்.
கோர்ட்டில் இருக்கிற வழக்கை வாபஸ் வாங்கினாலே தேர்தல் நடத்துவதற்கான வாசல் கதவு தீர்ந்து விடும். ராதாகிருஷ்ணன்தான் வழக்கை தொடர்ந்திருப்பவர். அவரது எதிராளி விஷாலும் போய் விட்டார் .அதனால் வாபஸ் வாங்க எந்த தயக்கமும் தேவை இல்லை.
இதை விடுத்து முதல்வர் எடப்பாடியை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன வந்திருக்கிறது.?அரசுக்கென ஒரு இமேஜை உருவாக்க முயற்சிக்கிறார்களோ!
தயாரிப்பாளர்களை வெறும் வோட்டர்களாக பார்க்கிற எண்ணம் எப்போதுதான் நீங்குமோ!