சிறுத்தைப் புலி கொழுத்த இரையைக் கண்டதும் கையில் உள்ளதை விட்டு விடுவதைப் போல ரஜினி கூப்பிட்டதும் “சூப்பர் தீனிடா சாமி’என்று போயஸ்கார்டன் பக்கமாக சிறுத்தை சிவா தாவி விட்டார். சூர்யாவும் பெரிய மனதுடன் ‘சென்று வாருங்கள் வென்று திரும்புங்கள்’என வாழ்த்தி அனுப்பி வைத்திருக்கிறார்.
சூர்யாவுக்காக படம் பண்ணுவதாக சொன்ன சிறுத்தை சிவா சூப்பர் ஸ்டாரிடம் சென்று விட்டதால் பாக்ஸ் ஆபீசில் அதகளம் பண்ணிவரும் அசுரன் பட இயக்குனர் வெற்றி மாறனுடன் தனது புதிய பட புராஜக்ட் பற்றி பேசுகிறாராம் சூர்யா.
வெற்றி மாறன் கையில் இரண்டு படங்கள் இருக்கிறது. எந்த படத்தை தள்ளி வைப்பார் என்பது தெரியவில்லை.