ஒரு சின்ன கதை.
1979-ஆம் ஆண்டு ‘புஷ்ய ராகம்’ என ஒரு மலையாளப் படம். அதில் நடிகை ஊர்வசி சாரதா முக்கிய வேடமேற்று நடித்திருந்தார்.
தயாரிப்பாளர் வி.வி.ஆண்டனியினால் முழுப்பணத்தையும் தர இயலவில்லை. பண நெருக்கடி, படம் வெளியான பின்னரும் கஷ்டமே தொடர்ந்தது.
அவர் மேலும் இரண்டு படம் எடுத்து பெருங்கடனாளி ஆனார்.
காலப்போக்கில் எல்லாமே மறந்து போச்சு. ஆனால் ஆண்டனியினால் மறக்க முடியவில்லை.தற்போது ஆண்டனி நல்ல நிலையில் இருக்கிறார். பிள்ளைகள் சிறப்பாக வாழ்கிறார்கள்.
இந்த நிலையில்தான் எர்ணாகுளம் டவுன் ஹாலில் ஒரு பாராட்டு விழா நடந்தது. அந்த விழாவில் ஊர்வசி சாரதா பாடகி பி.சுசீலா இன்னும் பலருக்கு பாராட்டு விழா நடந்தது.
அங்கே கையில் கவருடன் ஆண்டனி சென்றார். அதில் முன்னர் பேசிய முழுப்பணமும் இருந்தது.
சாரதாவை சந்தித்தார்.
அவருக்கு நினைவில்லை. எத்தனை வருடங்கள் கடந்து விட்டன.தன்னை இன்னார் என அறிமுகப் படுத்திக் கொண்ட பின்னர்தான் சாரதாவுக்கு நினைவுக்கு வந்தது.
பணத்தைப் பெற்றுக் கொண்டதும் இருவர் கண்ணிலும் கண்ணீர்த் துளிகள்!
அதற்கு இணை எதுவும் இருக்கிறதா?