தமிழ்ச்சினிமாவில் பெரிய படங்களைத் தயாரிப்பது என்பது லைகா, ஏஜிஎஸ் ,அந்த டி,வி, நிறுவனம் என்றாகி விட்டது. இவர்களை விட்டால் பெரிய நடிகர்களுக்கு அவ்வளவாக வருமானம் வராது என்பது உலக உண்மை.இவர்களது பிடியில் தான் தமிழக தியேட்டர்களின் முக்கால் பகுதி வசமாகி இருக்கிறது.
மீதி தியேட்டர்களை முக்கியமான பைனான்சியர்கள் கைவசம் வைத்திருக்கிறார்கள். இந்தியப்பகுதியை சீனாவும் பாகிஸ்தானும் எப்படி ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கிறதோ அப்படி ஆக்கிரமித்திருக்கிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்னதாகவே ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிங்கம் சூர்யா ,சிறுத்தை சிவா கூட்டணியில் ஒரு படம் என முடிவாகி இருந்தது.
இதற்கிடையில் தலைவர் ரஜினி கூப்பிடுகிறார் என்றதும் சிறுத்தை அந்தப் பக்கம் போய் விட்டது. இரையாக மிளா கிடைக்கிறபோது மான் தேடுமா சிறுத்தை?
தற்போது டைரக்டர் ஹரி இயக்கத்தில் சிங்கம் சூர்யா நடிப்பார் என தகவல் கிடைத்திருக்கிறது.இந்தப் படம் சூர்யாவின் 39வது படமாகும் .