ரோமியோ ஜூலிட் படத்தைத் தொடர்ந்து மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படம் “ வீரசிவாஜி “இதில் விக்ரம்பிரபு நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஷாமிலி நடிக்கிறார். மற்றும் ஜான்விஜய், ரோபோசங்கர், யோகி பாபு, நான்கடவுள் ராஜேந்திரன், மனிஷாஸ்ரீ, வினோதினி, ஸ்ரீரஞ்சனி, இயக்குனர் மாரிமுத்து, சாதன்யா, குட்டி ஆகியோர் நடிக்கிறார்கள்.இப்படத்தின் கதை,திரைக்கதை எழுதி இயக்கி வரும் கணேஷ் வினாயக்கூறியதாவது,’ கதாநாயகனுக்கும் ஒரு குழந்தைக்கும் நடக்கும் பாச பின்னைப்பை மையப்படுத்தி இதில் காதல், ஆக்ஷன், காமெடி கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாகி வருகிறது.இதன் முதற்கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரி, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. என்கிறார். ஒளிப்பதிவு – எம்.சுகுமார்,இசை – D.இமான்,எடிட்டிங் – ரூபன் ,-வசனம் – ஞானகிரி, சசி பாலா ,பாடல்கள் – யுகபாரதி, கபிலன், ரோகேஷ்