ஒரு காலத்தில் கணவனது பெயரைக் சொல்லக்கூடாது என்கிற ‘நாகரீக’த்தில் தமிழ்ப் பெண்கள் வாழ்ந்திருந்த போது…
அவர்களது கையில் கணவரது பெயரை குத்திக் கொண்டது உண்டு.
சிலர் தோள்,கெண்டைக்கால் ஆகிய இடங்களில் கோலப் பச்சை குத்தியிருப்பார்கள்.கட்டைவிரலும் ஆட்காட்டி விரலுக்கும் மத்தியின் தேள் பச்சை.
ரவிக்கை அணிவதில்லை.அது ஒரு காலம்.
ஆனால் தற்போது பிரா அணியக்கூடாது என ஒரு இயக்கமே இருக்கிறது பெண்களின் மத்தியில்.! ஜாக்கெட் என்கிற பெயரில் மார்பகம் முக்கால் பகுதி தெரிகிற மாதிரி போடுகிறார்கள்.
பெண் உரிமை.!
பழைய காலம் திரும்பிக் கொண்டிருக்கிறது. அந்தக் காலத்தில் எல்லாமே மறைக்கப்பட்டது.
இக்காலத்தில் எல்லாம் ‘பப்பரப்பே !’
பிரபுதேவாவை நயன் காதலித்த காலத்தில் பிரபுவின் பெயரை குறிக்கும் வகையில் பச்சை குத்தியிருந்தார். காதல் முறிந்ததும் அந்த பி எழுத்து பாசிட்டிவிடி ஆகி விட்டது.கையில் குத்தி இருக்கிறார்.
பாவனாவின் கையில் கிரீடம்
“நாங்கள் சூனியக்காரிகளின் பேத்திகள்’என்கிற வாசகம் ரீமா கல்லிங்கள் கையில்!மம்தா மோகன்தாசின் தொழில் ஓம் கணேஷாய !அமலாபாலின் நடுமுதுகில் ஒரு கோலம்.
அடிவயிறு, மார்பகத்தின் மேல் பகுதி இங்கெல்லாம் குத்திக் கொண்டிருக்கிறார்கள்.!