கலைப்புலி தாணுவின் ‘அசுரன்’ படம் தாறுமாறான ஹிட் கொடுத்து சாதனை செய்து வருகிறது.
தனுஷின் கேரியரில் இப்படியொரு இமாலய வெற்றி ‘அசுரனில்’தான் கிட்டி இருக்கிறது. இன்று வரை பாக்ஸ் ஆபீஸ் கெட்டி. ஸ்டெடி கோயிங்.! இந்த படத்தை தேர்தல் சுற்றுப் பயணத்துக்காக தென்மாவட்டங்கள் போயிருந்த அரசியல் தலைவர்கள் தூத்துக்குடியில் பார்த்திருக்கிறார்கள்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் படத்தைப் பார்த்து விட்டு பாராட்டு மழை பொழிந்திருக்கிறார். தற்போதுதான் சென்னையிலும் மழை ஆரம்பமாகி இருக்கிறது.
“பஞ்சமி நிலத்தை அபகரிக்கிற ஆதிக்க சக்திகளை தைரியமுடன் தட்டி கேட்டிருக்கிற படம், அல்ல.. அல்ல ,பாடம்! இயக்குநர் வெற்றி மாறனின் சக்தி வாய்ந்த வசனங்கள் பாராட்டுதலுக்கு உரியவை. தனுஷின் போற்றுதலுக்குரிய நடிப்பு வாழ்த்துகிறேன்” என தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டி இருக்கிறார்.
இதுவரை ஸ்டாலின் இப்படியொரு பாராட்டுதலை வழங்கியதில்லை.
அந்த அளவுக்கு படங்கள் வரவில்லையோ!?