இந்தியா விடுதலை அடைஞ்ச பிறகும் ஒரு சூதாட்டம் நடந்தது. அதாவது ஆர்.எம்.டி.சி.,லோட்டஸ் என்பது பேரு.
துண்டு பிரசுரம் மாதிரி இருக்கும் .அதில் ஒரு கேள்வி இருபது பதில்கள்னு பத்து பதினஞ்சு அயிட்டங்க இருக்கும் .
உதாரணமா உங்கள் முகத்திற்கு அழகை கூட்டுவது கண்ணா, மூக்கா ?
இதில் நீங்க எதை தேர்வு பண்ணுவீங்க. அந்த ரெண்டும் அவசியம்தான் ஆனா அழகுக்கு எது?
இப்படி புத்திசாலித்தனமா பத்து பதினஞ்சு அயிட்டம் இருக்கும். இதை பில் அப் பண்ணி எஜண்டு கிட்ட காசு கட்டி கொடுக்கணும். இப்படி காசு வாங்கியே லட்சாதிபதி ஆன ஏஜண்டுகள் இருந்தாங்க. இந்த புதிய வகை லாட்டரி சீட்டு நடத்தினவங்க கோடீஸ்வரர் ஆனவங்களும் இருக்காங்க. அவங்களின் பெயர்களுக்கு முன்னாடி லோட்டஸ் அடைமொழியாவும் இருந்தது. அப்புறமா அரசு இதை தடை பண்ணிருச்சு.
இப்ப அதே மாதிரி மெத்தட்லதான் டி.வி.களும் நீங்களும் ஆகலாம் கோடீஸ்வரர் நிகழ்ச்சிகளை ஆரம்பிச்சு தங்களுடைய பார்வையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கிறாங்க. அதாவது டிஆர்பி ரேட்டை உயர்த்திக்கிறாங்க.
வடக்கே அமிதாப் பச்சன் ,தெற்கே விஜய், இப்ப கலர்ஸ் டி.வி.
ஆனா இது சூதாட்டம் மாதிரி இல்லாம வேடிக்கை விளையாட்டாக நடக்கின்றன . நுழைவுக் கட்டணமும் இல்ல.
இப்ப கலர்ஸ் டி.வி.யில நடிகை ராதிகா “நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி ” நிகழ்ச்சியை நடத்தப் போறாங்களாம். முதன் முதலாக ஒரு பெண் அதுவும் நடிகை கலந்து கொள்கிற நிகழ்ச்சி.
இதில் பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். அனேகமாக அமிதாப் பச்சன் ஸ்டைலில் நடக்கலாம் .கலர்ஸ் டி.வி. தன்னை பிரபல படுத்திக் கொள்ள ராதிகாவை பயன்படுத்திக் கொள்கிறது.