ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த விஜய் மில்டன் , கோழி சோடா படத்தின் மூலம் தமிழ்ச் சினிமாவின் நம்பிக்கை இயக்குநர்களில் ஒருவராகி உள்ளார்..அவர் இயக்கிய ‘கோலி சோடா’ படம் வணிக ரீதியிலான வெற்றியையும்,. ‘ எளியவர்கள் வலிமையுள்ளவர்களாக மாற முடியும் என்கிற நம்பிக்கையையும் விதைத்தது.-விஜய் மில்டன் திரையுலகிற்கு வந்த கதையை அவரே விவரிக்கிறார்.
‘இயக்குநர் ஆவது என்பதே எனது விருப்பம். ஆனால் திரைப்படக் கல்லூரியில் இயக்குநர் படிப்பு சேரவேண்டும் என்றால் பட்டப் படிப்பு ஒரு டிகிரி முடித்து இருக்க வேண்டும்.அப்போதைய என் சூழலில் மேலும் 3 ஆண்டுகளை வீணாக்க விரும்பவில்லை. படித்த ப்ளஸ்டூவுடன் கிடைக்கிற ஒளிப்பதிவாளர் பிரிவில் சேர்ந்தேன். மானசீகமாக இயக்குநருக்கான தேடலுடன்தான் படித்தேன். 1991ல் முடித்தேன். அப்போது சக்தி சரவணன், வின்சென்ட் செல்வா போல 9 பேர் என் வகுப்புத் தோழர்கள்.இதுவரை 25 படங்கள் பணியாற்றியிருப்பேன். எல்லாப் படங்களிலும் இயக்குநருக்கான என் தேடல் இருந்து கொண்டேதான் இருந்தது. பெரும்பாலும் என் நண்பர்களே இயக்கியதால் மரியாதையுடன்தான் நடத்தினார்கள். இப்படி நான் பணியாற்றிய ‘காதல்’ ,’தீபாவளி’, ‘தயா’, ‘போஸ்’ ,’வனயுத்தம்’ ‘ஹலோ’, ‘சாக்லெட்’ ,’வழக்கு எண் 18/9′ போன்றவை மறக்க முடியாத பட அனுபவங்கள்.
ஒளிப்பதிவு செய்த போதே திரைக்கதைகள் எழுத ஆரம்பித்தேன்.எனக்குள் அது ஒரு பக்கம் நடக்கும். ஒளிப்பதிவு வேலை ஒரு பக்கம் நடக்கும் அப்படி உருவான ஒரு கதைதான் ‘கோலிசோடா’. அக்கதை மூலம் நம் விருப்பப்படி நட்சத்திரங்கள் யாரையும் சாராது அதை உருவாக்க முடியும் என்கிற நம்பிக்கை வந்தது.நான் இப்போது இயக்கும் படம் ’10 எண்றதுக்குள்ள ‘ .விக்ரம்தான் நாயகன். சமந்தா, ஷாக்கி ஷெராப், அபிமன்யு சிங், ‘முண்டாசுப்பட்டி’ முனிஷ் நடிக்கிறார்கள்.90 சதவிகித படப்பிடிப்பு முடிந்து விட்டது. 2 பாடல்கள், க்ளைமாக்ஸ் மட்டும் பாக்கியுள்ளது.என்கிறார்.