ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கமல்ஹாசன் நேற்று சந்தித்து பேசினார். விஜயவாடாவில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் அலுவலகத்தில் சுமார் 2 மணி நேரம் இந்தச் சந்திப்பு நடந்தது.இச் சந்திப்பின்போது, சந்திரபாபு நாயுடுவிடம் அமராவதியில் தனி திரைப்படத் துறையை உருவாக்கவும்,.தெலுங்கில் வெளியாகவுள்ள தனது சீகட்டி ராஜ்ஜியம் படத்தின் சிறப்புக் காட்சிக்கு வருமாறும் அழைப்பு விடுத்தார் .
. இதே போல சீகட்டி ராஜ்ஜியம் படத்தின் தனிக் காட்சி தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்திலும் நடக்கும் என்றும் அதற்கு தெலுங்கானா முதல்வருக்கும் அழைப்பு விடுக்கப் போவதாகவும் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.