சோழப்பேரரசின் பின்னணியில் அமரர் கல்கி எழுதிய மாபெரும் காவியம் ‘பொன்னியின் செல்வன்’
தலை முறைகளைத் தாண்டியும் மக்களின் மனதில் சிம்மாசனமிட்டிருக்கிற காவியம். வாசிப்போர் உலகம் ஜீவித்திருக்கும் வரையில் இந்த அமர காவியத்தின் பெருமை அழியாதிருக்கும்.
அற்புதமான படைப்பு. திரைக்கு கொண்டு வருகிற அரிய முயற்சியில் லைகாவும் மணிரத்னமும் இறங்கி இருக்கிறார்கள்.இயக்குனர் மணிரத்னத்தின் மனத்திரை 70 எம்.எம். அகலத்திரை மாதிரி.
அதில் கேரக்டர்களை ஓடவிட்டுப் பார்ப்பார்.காட்சிக்குரிய களம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அதில் பதிவு செய்திருப்பார்.பழங்கால தமிழகத்தின் மாளிகைகளும் குடிசைகளும் அதில் வாழ்ந்த மாந்தர்களும் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை கல்கி சொன்னதை அதில் கொண்டு வரப்பார்ப்பார்.
கடுமையான முயற்சிதான்.!
கார்த்தி,விக்ரம் ஜெயம்ரவி, மோகன்பாபு,,கீர்த்தி சுரேஷ் என நடிகர்களை அடுக்கியிருக்கிறார். கூடுதலாக இன்னும் யார் யாரை இணைப்பார் என்பது கதையின் முதல் பாகத்தின் தேவையாக இருக்கக்கூடும். தற்போது பிரபு நடிக்க இருப்பதாக சொல்கிறார்கள்.
நடிப்பதாக சொல்லப்பட்ட பலர் நடிக்கவில்லை என தெரிகிறது.
தொடர்பு கொள்ள முயன்றபோது தொடர்பு எல்லைக்குள் அவர்கள் இருக்கவில்லை.
படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதும் தெளிவாக இல்லை.எந்தெந்த நடிகர்கள் என்பது மணிரத்னம் சொல்கிற வரை அவரவர் கற்பனை அவர்களுக்கே சொந்தம்.!
ரவிவர்மன் ஒளிப்பதிவு என்பது ரவிவர்மாவின் ஓவியத்தைப் போன்றது.
ஏஆர்ரகுமான் நம்மை சோழர் காலத்துக்கு நம்மை அழைத்து செல்ல வேண்டும் .உலகறிய செய்யவேண்டிய மூவரும் எப்போது களம் காண்பார்கள்? அதான்யா தெரியல. ஐஸ்வரியாராயே இல்லியாம்.