இப்படத்தில் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும் விதமாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்திருக்கிறார். ஒரு சிறப்பு தோற்றத்தில் இப்படத்தில் அவர் நடித்துள்ளார்.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இது பற்றி கூறியதாவது…
சிறப்புத் தோற்றம் என்பதை விட என்னைப் பொறுத்தவரை இது படத்தை மாற்றும் முக்கிய கதாப்பாத்திரம் என்பேன். அவர் படத்தில் வரும் நேரம் படத்தின் முக்கியமான கட்டமாக, படத்தை அடுத்த உயரத்துக்கு எடுத்துச் செல்வதாக இருக்கும்.
திரைக்கதை முடிக்கப்பட்டு முக்கிய நடிகர்களின் தேர்வுகள் முடிந்த பிறகு இந்தப்பாத்திரத்தில் நடிப்பதுக்கு ஏற்ற ஒருவரை தேடினோம். மிகப்பிரபலமாக இருக்கும் அதே நேரம், கேரக்டரில் எளிமையை நிஜத்தை பிரதிபலிக்க வேண்டும். இறுதியாக அசோக் செல்வன் மூலம் விஜய் சேதுபதியிடம் கதையை, கேரக்டரை பற்றி விவரித்தேன் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டு வாழ்த்தினார்” என்றார்