சொந்தக் கதையா, திருடுன கதையா என்கிற பஞ்சாயத்தே இன்னும் முடியாத நிலை. தளபதி விஜய் படம் என்றாலே கதையின் அசல் வித்து வேறாக இருக்குமோ என்கிற பயம்தான் வருகிறது. பிகிலின் நிலையும் அதுதான்!
இந்த நிலையில் வருகிற தீபாவளி வெளியீடாக கார்த்தி நடித்த ‘கைதி ‘ திரைப் படம் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டதும் பிகில் கம்பெனிக்கு அதிர்ச்சி.
தனியாக வந்து மொத்த அறுவடையும் தனக்கே என கனவு கொண்டிருந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு அதிர்ச்சி. அடி வயிற்றில் சற்று கலக்கம். ‘கைதி’யும் வருகிறதே என்கிற பயத்தில் கைதியின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்தில் பிகிலின் வெளியீட்டுத் தேதியையும் அறித்தார்கள்.
இத்தோடு நின்றிருந்தால் பரவாயில்லை.
“நாங்கள் நல்ல படம் எடுத்திருக்கிறோம் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை!” என ஒரு கருத்தை பதிவு செய்தார்கள்.
யார் இவர்களை பயமுறுத்தியது?
தேவையற்ற பதிவு. பதிலடி வராது போகுமா?
கைதி தயாரிப்பாளர் எஸ்.ஆர், பிரபு ” நான் ஒரு நல்ல பாம்பு. எனவே நல்ல படம் மட்டுமே எடுப்பேன்” என பதிவு செய்திருக்கிறார்.
தீபாவளி படங்கள் எத்தனை வந்தாலும் படங்களின் வெற்றியை நிர்ணயிப்பவர்கள் நடிகர்களின் ரசிகர்கள்தான்..அவர்கள்தான் நீதிபதிகள்.
ரிசல்ட்டுக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன.