‘காப்பான்’ படத்துக்குப் பிறகு அண்ணன் சூர்யா யாருக்கு படம் பண்ணுவார் ” என்கிற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களின் மத்தியில் எழுந்திருக்கிறது.
சிவா படம் பண்ணுவார் என எதிர்பார்த்த நிலையில் அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி வாய்ப்பு வழங்கி தன்னுடைய பக்கமாக இழுத்துக் கொண்டு விட்டார். இதனால் வெற்றி மாறனுடன் படம் பண்ணுவார் என எதிர்பார்த்தனர்.
ஆனால் வாய்ப்பு இயக்குநர் ஹரிக்கு சென்று விட்டது. சூர்யாவுக்காக மிகவும் கவனமுடன் கதை பண்ணி வைத்திருக்கிறாராம் ஹரி.
வித்தியாசமான கதைக்களம். அதிரடி ஆக்ஷன் ,சமூக சிந்தனையுடன் அமைந்திருக்கிற கதை என்கிறார்கள்.