சிம்பு வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் சில பிரச்னைகள் தீர்வுக்கு வரலாம் என நம்பப்பட்டது.
அதில் சுரேஷ் காமாட்சியின் ‘மாநாடு’ படமும் ஒன்று.
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சிம்பு மீது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி புகார் செய்திருந்தார். அதில் முக்கியமான அம்சம் சிம்பு சரியான நேரத்துக்கு ஷூட்டிங் வருவதில்லை ,ஒத்துழைப்புத் தருவதில்லை என்பது.
இது தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தரிடம் பேசியதாக தெரிகிறது.
“காலை 10 மணிமுதல் மாலை 6 மணி வரை சிம்பு படப்பிடிப்புக்கு வருவார் .ஆனால் சிம்புவின் கால்ஷீட் தேதிகளை தயாரிப்பாளர் வீணடித்து விட்டார் ” என உஷா ராஜேந்தர் சொன்னதாக தெரிகிறது.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தரப்பில் சில கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறார்கள்.அதில் சிம்பு இழப்பீடு தருவது பற்றியும் ஒரு அம்சம் இருக்கிறதாம். இதற்கு ஒத்துவரவில்லை என்றால் பிரச்னைதான் என்கிறார்கள்.
இரு தரப்பினரும் பரஸ்பரம் ஒற்றுமையுடன் வந்தால் மாநாடு பிரச்னை சிக்கல் இல்லாமல் முடிவுக்கு வரலாம்.
இந்த படத்தில் சிம்புவுக்கு இணையாக கல்யாணி பிரியதர்சன் நடிக்கலாம். வெங்கட் பிரபு இயக்குவார்.
நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.!