அல்டி திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் முக்கிய நடிகர்கள் , தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டார்கள். மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கலந்து கொண்டு சிறப்பித்தது விழாவின் முக்கிய அம்சம்.
‘டத்தோ’ ராதாரவி வழக்கம் போல காமடியாகவும் நக்கலாகவும் பேசி கலகலப்பு ஏற்படுத்தினார். அவர் பேசியதாவது.
“சினிமா இப்போது சிரமத்தில் இருக்கிறது. பார்த்திபன் நடித்த ‘ஒத்த செருப்பு’ படத்தை திரையரங்கிற்குச் சென்று பார்த்தேன். கைபேசியில் அழைத்து வாழ்த்தினேன். திரையரங்கில் ஹவுஸ்புல்லாக இருந்தாலும் அந்த படத்தை மறுநாளே எடுக்கச் சொல்லிவிட்டார்கள். மிகவும் கஷ்டமாக இருந்தது. படங்கள் பார்க்கப் பார்க்கத்தான் கூட்டம் வரும். நல்லா ஓடிக்கொண்டிருக்கும் சிறு பட்ஜெட் படங்களை உடனே எடுத்து விடாதீர்கள் என்று தியேட்டர்க்காரர்களைக் கேட்டுக் கொள்கிறேன்., தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்று அது தொடர்பாக பேசவும் செய்தென்.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் ’வாஸ்கோட காமா’ பாடல் எல்லோரையும் ஆட்டம் போட வைக்கும். இயக்குநர் உசேனுக்கு எனது அடுத்த படத்தில் வாய்ப்பு கொடுப்பேன். “என்று பேசினார்.
நடிகர் விஜய்சேதுபதி பேசுகையில் “மயில்சாமியின் நடிப்பும், பேச்சும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஒரு காட்சியில் வந்தாலும் சரி, பல காட்சிகளில் வந்தாலும் சரி அவருக்கென்று ஒரு பாணி இருக்கும். அதேபோல் பேச்சிலும், நடிப்பிலும் தேவையில்லாமல் எதையும் செய்ய மாட்டார். மிகப்பெரிய ஜாம்பாவான்களிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறிவார்கள். மயில்சாமியிடம் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும், அவருடைய அப்பாவித்தனத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.மகன் அன்பும் அவருடைய அப்பாவிடமிருந்து கற்றுக் கொள்ள பல விஷயங்கள் இருக்கிறது. அதைக் கற்றுக் கொண்டு அன்புவெற்றியடைய வேண்டும் என்றார்.
இயக்குநர் உசேன் பேசும்போது,இரண்டு மாதங்களில் படம் வெளியிடுவதற்கு திட்டமிட்டிருக்கிறோம். அனைவரும் வந்து வாழ்த்தியதற்கு நன்றி என்றார்.
தயாரிப்பாளர் ரஹ்மத்துல்லா பேசும்போது,நண்பர்கள் ஐந்து பேர் சேர்ந்து இப்படத்தைத் தயாரித்துள்ளோம். ‘அல்டி’ படம் மூலம் திரைத்துறையில் பயணிக்க வந்துள்ளோம் என்றார்.