என்னமோ காதலுக்கே இவர்கள்தான் அத்தாரிட்டி என்பதை போல பேசுகிறார்கள்?
“அதென்ன நியாயம் சார்! அவரை விட அந்த அம்மாவுக்கு 12 வயசு அதிகம். வயசுக்கு வந்த பையனும் இருக்கான்.இந்த கர்மத்தில் லவ் கேக்குதா? எப்படி சார் சகிக்கிறது?” என பொங்குகிறார்கள் .
அதாவது போனிகபூரின் மூத்த தாரத்து மகன் அர்ஜுன் கபூர்.
இவரும் சல்மான்கானின் சகோதரரின் முன்னாள் மனைவி மலாய்கா அரோராவும் காதலிக்கிறார்கள். ஒன்றாய் ஊர் சுற்றுகிறார்கள் .லிவிங் டுகெதர் பாலிசியில் லைப் ஓடிக்கிட்டிருக்கிறது . இதைத்தான் கண்டித்து காய்கிறார்கள்.
சம்பந்த இருவரின் வீட்டாரும் நிம்மதியாக சந்தோஷமாக பார்த்து ரசிக்கிறபோது ஊருக்கென்ன வந்தது?
அட போங்கய்யா!