ராதிகா ஆப்தே.
துணிச்சலின் மறு உருவம் என சொல்லலாம். கருத்துகளாகட்டும் ,சமூக பிரச்னைகளாகட்டும் தனக்கென கொண்டிருக்கிற எண்ணங்களை அச்சமின்றி சொல்லிவிடுவார்.
“என்னடா இதுவும் கண்ணு, மூக்கு ,கை மாதிரியான உறுப்புதான் .இதையேன் மறைப்பானேன் என மார்பகங்களை வெளிக்காட்டுவதிலும் இவர் கில்லாடி. கட்டியணைத்து முத்தமிட்டுவிட்டு இதுவும் நடிப்புதான் என சொல்லிவிடுவார்.
இதெல்லாம் எதற்காக சொல்கிறீர்கள் என சிலர் நினைக்கலாம்.
இப்போது இயக்குநர் ஆகிவிட்டார்.
‘ஸ்லீப் வாக்கர்ஸ் ‘என்கிற படத்தை இயக்கி இருக்கிறார்.
“இந்த படம் சமூகத்தை பல கேள்விகள் கேட்கப்போகிறது ” என்கிறார் ரஜினியின் பட நாயகி ராதிகா ஆப்தே.
தமிழகத்திலும் சிலர் இருக்கிறார்கள்.ஆனால் அவர்கள் இயக்கத்தில் நுழைவதற்கு தயங்குகிறார்கள்.