‘பிகில் ‘ படம் வெளிவந்த பின்னர் நடிகர் விஜய் பல விதங்களில் விமர்சிக்கப்படுகிறார்.
பொதுவாக அவரது படம் வெளியாவதற்கு முன்னர் விவகாரமான அரசியல் கருத்துகளை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி விட்டு விடுவார். ஊடகங்களும் தங்களின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ள அந்த பிரச்னையை ஊதி பெரிதாக்கி விடும்.
இந்த நிலையில்தான் அரசும் சற்று அச்சப்படும் .தங்களை விமர்சிக்கிற காட்சிகள் இருக்குமோ என வேவு பார்ப்பார்கள். தணிக்கை முடிந்ததும் அரசின் மிரட்டல் வரத் தொடங்கும்.
விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் ‘சரண்டர் ‘ஆவதை போல பேசுவார். இது விஜய்யின் படங்களின் வழக்கமாக நடக்கிற நாடகம்தான்.!
பிகில் படத்தின் சில விமர்சகர்கள் தங்களது பாணிக்கு அரசியலை வலுக்கட் டாயமாக கொண்டு வந்து விடுகிறார்கள் .
படத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப்பின் கேரக்டரை தமிழக பா.ஜ.க. பிரமுகர் எச்.ராஜாவுடன் ஒப்பிட்டு கலவரத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.
எச்.ராஜாவின் முழுப்பெயர் ஹரிகரன் ராஜா சர்மா என்பது. இவர் பிகாரி பிராமண குடும்பத்தின் வழி வந்தவர். பிறந்தது தமிழ்நாடு என்றாலும் பூர்வீகம் பிகாரி
பிகில் படத்தில் ஜாக்கி ஷெராப்பின் பெயர் சர்மாவில்தான் முடியும்.
கக்கூஸில் அரை டவுசருடன் அவரை அரை நிர்வாணமாக உட்கார வைத்து அடித்து உதைப்பதும் விஜய் எச்சரிப்பதும் எச்.ராஜாவை நினைவில் வைத்துதான் என்பதாக சொல்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட இனத்தவரை உயர்த்தியும் மற்றோரு இனத்தவரை மட்டம் தட்டுவதும் விஜய்-அட்லி படங்களில் இருந்து வருகிறது எனவும் சொல்கிறார்கள்.
ஆனால் படத்தை பார்க்கிறவர்கள் விமர்சகர்கள் அணுகுகிற மாதிரி ரசிக்கிறார்களா என்றால் இல்லை என்றே சொல்ல முடியும்.