நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.இந்த நிலையில் இந்த படத்தின் அட்டகாசமான போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் கையில் துப்பாக்கியுடன் தோன்றும் இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் ரஜினி, தர்மா ஐ.பி.எஸ். என்ற போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படம் 2020ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளது.