பிக் பாசில் முகிழ்த்த காதல்தான் மலேசிய திரைப்படத்தில் நடிப்பதற்கு அபிராமிக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்ததா?
இப்படியொரு சந்தேகம் வரத்தான் செய்யும்.!
நேர்கொண்ட பார்வை படத்தில் சிறப்பாக நடித்தவர் அபிராமி.
அடுத்து வாய்ப்புகளுக்காக காத்திருந்தார். ஆனால் அதற்குள் முகென் ராவ் சிபாரிசில் மலேசிய படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகிவந்தார்கள். காதல் என கிசு கிசுக்கவும் பட்டது .
அது உண்மைதானோ!!
“மலேசிய மண்ணில் காலடி வைத்திருக்கிறேன்.நான் புண்ணியம் செய்தவள். இங்குள்ள தயாரிப்பாளர்களின் படத்தில் நடிக்கிறேன்.படத்துக்கு ‘கஜன் ‘என பெயர்.” என அபிராமி பதிவிட்டிருக்கிறார்.