ஆண்களிடம் பகிர்ந்து கொள்வதை விட பெண்களிடம்தான் தங்களின் உள்ளக்கிடக்கையை நடிகைகள் பகிர்ந்து கொள்கிறார்கள்.
நடிகை லட்சுமி மஞ்சுவிடம் காஜல் அகர்வால் மனம் திறந்து தனது திருமண ஆசையை வெளியிட்டிருக்கிறார்.
“காஜல் ,உன்னுடைய திருமணம் எப்பம்மா?”
“சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கிற திட்டம் இருக்கு. நல்ல மாப்பிள்ளையா தேடிட்டு இருக்கோம்.”
“மாப்பிள்ளை எப்படிப்பட்டவரா இருக்கணும்?”
“பொசஸ்ஸிவ்வா இருக்கணும்.என்னை மிகவும்நேசிப்பவரா இருக்கணும்.குறிப்பா ஆன்மிகவாதியாக இருக்கணும்!”
“நீ ஆன்மீகத்தை அவ்வளவு நேசிப்பவளா காஜல்?”
“எஸ்.! நான் வெளியூர் எங்குபோனாலும் சிறிய அளவிலான சிவலிங்கத்தையும் எடுத்திட்டுப் போவேன்.”என்கிறார் காஜல் அகர்வால்.