இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று இரவு வானில் வர்ணஜாலம் , வெடிசத்தம் .
அதே நேரத்தில் ஆள் துளை கிணற்றில் விழுந்த சுஜித் என்கிற சிறுவன் உயிருடன் இருக்கிறானா என்பது தெரியாமல் தமிழக அரசு ‘திறமையாக ‘செயல்பட்டு வருவதாக பற்று பாசம் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் தமிழக அரசினை பாராட்டி இருக்கிறார்..
அவருக்கு என்ன நிர்பந்தமோ?
ரஜினிகாந்த் வீட்டுமுன் காத்திருந்த ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்.
இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் ரஜினிக்கும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
அப்போது அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்களிடம் ரஜினிகாந்த் கூறியதாவது,
“எல்லோருடைய இதயங்களிலும் வாழ்க்கையிலும் இந்த வருட தீபாவளி வெளிச்சத்தை தரணும்னு ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.இந்த நாளில் பூமிக்கடியில் கடந்த 36 மணிநேரமாக சிக்கித்தவிக்கும் அந்த 2 வயசு பையன் சுஜித் உயிருடன் நலமுடன் மீண்டு வரணும்னு ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
தமிழக அரசை பொறுத்தவரை இவ்விவகாரத்தில் குறைசொல்ல முடியாது அவங்க தீவிரமா மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வர்றாங்க.( அதை மக்கள்தான் சொல்லணும்.)
அந்த குழந்தை நலமுடன் மீண்டு வரணும்னு ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்..பெற்றோர்