இவளும் ஒரு பெண்ணா?
தன்னுடைய காதலுக்குத் தடையாக இருக்கிறாளே அம்மா ,அவள் செத்தால்தான் என்ன ? குடியா முழுகப் போகுது?
கீர்த்தி .வயது 19. படித்த பெண்.ஆனால் பட்டதாரி ஆகவில்லை.
ஆனால் காதல் வந்து விட்டது. காதலன் கிடைத்து விட்டான்.
ஹைதராபாத்துக்கு வெளியில் ஹயத் நகர். இப்போதுதான் விரிவடையத் தொடங்கி இருக்கிறது.
அதனால் கவலைகள் இல்லாமல் காதல் ஜோடி கண்டபடி சுற்றவே கண்டித்திருக்கிறாள் அம்மா ரஜிதா.
கீர்த்திக்கு கோபம். காதலனை வீட்டுக்கு வரவழைத்திருக்கிறாள்.
அவன் ரஜிதாவின் கால்களை கெட்டியாக பிடித்துக் கொள்ள, மகள் கீர்த்தி அம்மாவின் கழுத்தை துணியினால் இறுக்கி கொலை செய்திருக்கிறாள்.
கொஞ்சம் கூட பயம் இல்லை. பெற்ற அம்மாவையே கொன்று விட்டோமே என்கிற குற்ற உணர்ச்சி இல்லை.
காதலை விட அவளுக்கு காமம்தான் தலைக்கேறி இருக்கிறது.
அம்மாவின் சடலம் ஒரு புறம் ,
கீர்த்தியும் காதலனும் இன்னொரு பக்கம் களியாட்ட ம்.
இப்படி பகல் இரவு மூன்று நாளும் உல்லாசம்.
பிணம் அழுகி வீச்சம் எடுத்தது.
இரவு வந்ததும் சடலத்தை அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தின் பக்கமாக போட்டு விட்டு வந்து விட்டார்கள்.
வெளியூர் சென்றிருந்த அப்பா திரும்பி வந்து விட்டார்.”அம்மா எங்கே?”
“விஜயவாடா போயிருக்கா. இன்னும் திரும்பல”
எத்தனை நாளைக்கு உண்மையை மறைக்க முடியும்?
தற்போது காவல் விசாரணையில்!