தற்போது இந்தியன்.2 படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருப்பவர் காஜல் அகர்வால். வயதான கிழவியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சவாலான ரோல்.
இவரை லட்சுமி மஞ்சு அவரது சின்னத்திரை நிகழ்ச்சிக்காக பேட்டி எடுத்தார்.
அந்த பேட்டியில் ஒளிவு மறைவு இல்லாமல் பலர் தங்களின் ஆசைகளை பதிவு செய்திருந்தனர்.
அந்த வரிசையில் ஒரு கேள்வி காஜலிடம்.!
வேடிக்கையான கேள்வி என்றாலும் அதில் உள்குத்து இருக்கும்.
“காஜல்! அதாவது ராம்சரண்,தாரக் ,பிரபாஸ் இந்த மூவரில் யாரைக் கொல்ல தோன்றும்? யாருடன் நட்பாக இருக்கவிரும்புவாய், யாரை கல்யாணம் செய்து கொள்ள விரும்புவாய்?”
பட்டென பதில் வந்தது.
“ராம் சரண்ணை கொல்ல தோணும். தாரக்குடன் நட்பாக இருக்கலாம். பிரபாஷை கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுவேன்”
பிரபாஷ் .அனுஷ்கா இருவரும் நெடு நாளைய காதலர்கள் என கிசு கிசுக்கப்பட்டு வருகிற நிலையில் காஜலின் இந்த பதில் தெலுங்கு தேசத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.