தேவர் மகன் 2 படத்தை கொண்டு வரவேண்டும் என்பது உலகநாயகன் கமல்ஹாசனின் ஆசையாக இருந்தது. ஆனால் அதே பெயரில் வெளிவருவதை மக்கள் நீதி மய்யம் விரும்பவில்லை.
சாதி மத பிரச்னைகளுக்குள் கமல் சிக்க வேண்டாம் என அவர்கள் கருதுகிறார்கள். கமலின் கருத்தும் அதுவாகத்தான் இருக்கிறது என்பதின் வெளிப்பாடுதான் ‘தலைவன் இருக்கிறான்’ என்கிற டைட்டில்.
இந்த தலைப்பில்தான் தேவர் மகன் 2 வரப் போகிறது என்கிறார்கள்.
சட்டசபை தேர்தலின் போது சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர் என்கிற இமேஜ் இருக்கவேண்டும் என தலைவர் கமல் விரும்புகிறாராம்.. தேவர் மகன் என பெயர் வைப்பதினாலேயே அவர் அந்த சாதியை சப்போர்ட் பண்ணுகிறவர் என்கிற எண்ணம் எவர்க்கும் வந்து விடக்கூடாது அல்லவா!
பொதுவாகவே கமல்ஹாசனுக்கு சாதி மறுப்பு எண்ணம் இருக்கிறது.
அதனால்தான் ‘தலைவன் இருக்கிறான்’ என்கிற டைட்டில். இது அரசியல் கலந்த படமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
முதல் பாகத்தில் நடித்த வடிவேலு இரண்டாம் பாகத்திலும் இருப்பார் என்கிறார்கள். ஆனால் அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் தடை போட்டிருப்பதால் நடிக்க இயலுமா என தெரியவில்லை.