சேவியர் பிரிட்டோ .தளபதி விஜய்யின் தந்தை வழி நெருங்கிய உறவினர். இவரது தயாரிப்புதான் தளபதி 64 .
இந்த படத்தின் வில்லன் கேரக்டரில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கப்போகிறார். இவர் தெலுங்கு படங்களிலும் அதிகமான தமிழ்ப் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். எந்தப்படமாக இருந்தாலும் அதில் விஜய் சேதுபதியின் தனித் தன்மை வெளிப்படும். சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்தில் விஜய்சேதுபதியின் நடிப்பு தூக்கலாகத்தான் இருந்தது.
படத்துக்குப் படம் வித்தியாசமான கேரக்டர்களில் பின்னி எடுத்துக் கொண்டிருக்கிறார் விஜய்சேதுபதி.
இதனால் அவருடைய காட் சிகளை முதலில் எடுத்து விடும்படி இயக்குநர் லோகேஷ் கனகராஜின் டீமை கேட்டுக் கொண்டிருக்கிறார் விஜய். எப்போதும் ஒரு நேரத்தில் ஒரு படத்தில்தான் இவர் கவனம் செலுத்துவதாக சொல்லியிருக்கிறார் என்கிறார்கள். இருவரும் சேர்ந்து நடிக்கவேண்டிய காட்சி களை பிறிதொரு தேதிகளில் விஜய் சேதுபதியின் கால்ஷீட் களை வாங்கி எடுத்து விடலாம் என சொன்னதாக சேதி.
தற்போது மக்கள் செல்வன் லாபம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். உலகாயுத அமைப்பின் தலைவரும் இயக்குநருமான எஸ்.பி.ஜனநாதனின் படம்தான் லாபம்.