இந்த வருட தீபாவளிக்கு திரையிடப்பட்ட படம் பிகில்.
தளபதி விஜய் நடித்திருக்கிற படம்.விஜய் -அட்லீ இயக்கத்தில் வந்திருக்கிற படம். ஏஜிஎஸ் பிரதர்ஸ் எடுத்துள்ள இந்த பிரமாண்டமான படம் வசூலை அள்ளிக் குவிக்கிறது என்று பல ஊடகங்கள் சொல்லி வந்தாலும் உண்மை நிலை என்ன என்பதை இன்று தேவி பாரடைஸ் தியேட்டர் சொல்லி விட்டது. எந்த படமாக இருந்தாலும் அதை பற்றி பிரமாதமாக டிவிட்டர் மற்றும் இணையதளங்களில் எழுதுவதற்கு பத்திரிகையாளர்களாக இல்லாதவர்களுக்கு பணம் கொடுத்து எழுத செய்கிறார்கள்.
தேவி பாரடைஸ் என்பது சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள பெரிய தியேட்டர் ஆகும்
இந்த தியேட்டரில் மதிய ஷோவுக்கு போதிய கூட்டம் வராததால் பகல் காட் சியை ரத்து செய்து விட்டதாக தியேட்டர் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.