உலகளாவிய வசூல் நிலவரம் சொல்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் பிகில் திரைப்படத்தை வாங்கி திரையிட்டவர்கள் வேறு விதமாக சொல்கிறார்கள்.
ஏஜிஎஸ் படத் தயாரிப்பு நிறுவனத்தைப் பொருத்தவரை நட்டம் ஏற்பட வாய்ப்பே இல்லை. அவர்கள் அதிக லாபத்துக்கு விற்றதாக சொல்லப்படுகிறது. அவர்களிடம் படம் வாங்கியவர்களுக்குத்தான் லாபமா நட்டமா என்கிற பிரச்னை. தியேட்டர்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் குறைந்து வருகிறது. போட்ட காசை எடுக்க முடியாது என்கிறார்கள்.
விஜய்யுடன் போட்டியிட்ட கைதி கார்த்தியின் படம் இன்று வரை நல்ல வசூல் என்கிறார்கள். பிகிலை விட கைதி வசூலில் ஸ்டெடியாக போகிறதாம் . பிகிலை தூக்கிவிட்டு அந்த இடங்களில் கைதியை வெளியிட்டிருக்கிறார்கள்.
பிகில் வெளியான முதல் நான்கு நாள் வசூலைத் தவிர மற்ற நாட்களில் வசூலாகவில்லை.இதனால் இரண்டு ஸ்கிரீனில் போட்டவர்கள் ஒரு ஸ்கிரீனாகவும் இரண்டு தியேட்டர்களில் வெளியிட்டவர்கள் ஒரு தியேட்டராகவும் குறைத்து விட்டார்கள்.உதாரணத்துக்கு பிகில் படத்தை மதுரை ஏரியாவை 12 கோடிக்கு வாங்கியவர்கள் 7கோடி தான் வசூலாகி இருக்கிறது என்கிறார்கள். மொத்தத்தில் தமிழ்நாட்டில் மட்டும் 40 கோடி வரை நட்டம் வரலாம் என்கிறது கோலிவுட்
போட்ட பட்ஜெட்டை விட கூடுதலாக செலவாகி இருக்கிறது. அட்லீதான் காரணம் என்கிறார்கள்.