‘காஜலுக்கு மாப்ள ரெடி’.
சந்தோஷத்தில் முதலில் செய்தி எழுதுகிறவன் பத்திரிகையாளன்தான்.
சொந்த வீட்டைப் பற்றிக் கூட கவலைப் படமாட்டான் .பிரபலங்கள் வீட்டு கல்யாணம் பற்றி துப்பறிந்து செய்தி போடுவதில் ஆர்வம் காட்டுகிறவன்.
அது அவனது தொழில்.
34 வயது ஆகிவிட்டதே காஜல் அகர்வாலுக்கு. இன்னும் கல்யாணம் ஆகாமல் இருந்தால் எப்படி? தங்கை நிஷாவுக்கு கல்யாணம் நடந்து ஒரு ஆண் குழந்தையும் பெற்றாகி விட்டது………! இதுவும் செய்தி ஆகும்!
தற்போது காஜலுக்கு கல்யாண ஆசை வந்து விட்டது. விரைவில் சேதி சொல்வேன் என அவரே அறிவித்து விட்டார்.
அவருடைய பெற்றோர் வினய் ,சுமன் மகளுக்காக ஒரு மாப்பிள்ளையைப் பார்த்துவிட்டார்கள். பெரிய பிசினஸ்மேன். ஜாதகமும் பார்த்தாகிவிட்டது. குருவின் ஆசிர்வாதம் கிடைத்து விட்டது.
ஆனால் அந்த மாப்பிள்ளையை மணந்து கொள்வது பற்றி இன்னும் காஜல் சம்மதம் சொல்லவில்லை.
காரணம் ,கையில் இருக்கிற படங்களை முடித்துக் கொடுத்தாக வேண்டும். அதற்குள் இன்னார்தான் மாப்பிள்ளை என்பதை சொல்லிவிட்டால் அதில் சுவை இருக்காது.
தங்கை நிஷா அவரது மாப்பிள்ளையை பெற்றோரின் சம்மதத்துடன் தான் மணவிழாவுக்கு முன்னதாக சந்தித்து பேச முடிந்தது.
இதை போலத்தான் காஜலுக்கும் நடக்கும்.!