பிரதமர் மோடி அக்.26 ஆம் தேதி பாலிவுட் நட்சத்திரங்களுக்கு மட்டும் தனி விருந்தளித்து அவர்களுடன் தனது வீட்டில் பேசினார்.
தேசப்பிதா காந்தியடிகளின் 150 ஆவது பிறந்த நாளை கொண்டாடுவது பற்றிய கலந்துரையாடல் என சொல்லப்பட்டது.
இந்த விழாவில் எப்படியோ எஸ்.பி.பாலசுப்ரமணியமும் கலந்து கொண்டிருக்கிறார். ஈநாடு ராமோஜிராவ்ஜி உதவியுடன் சென்றிருக்கிறார். ஆக அன்றைய விழாவில் பாஜக ஆதரவு புள்ளிகளும் கலந்து கொண்டிருக்கிறார்கள். பாலிவுட் நட்சத்திரங்கள் பிரதமருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். எப்படி எடுக்க முடிந்தது? பிரதமருடன் யார் யார் செல்பி எடுத்துக் கொள்ளலாம் என விதிமுறைகள் ஏதேனும் இருக்கிறதா?
இதோ வயிற்றெரிசலுடன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் டிவிட்டர் பதிவு.!
“பிரதமர் விருந்துக்கு ஈநாடு ராமோஜி ராவ் உதவியுடன் நானும் சென்றிருந்தேன். வீட்டுக்குள் நுழையும் போதே எங்களின் செல்போன்களை பாதுகாப்பு காரணங்களை சொல்லி பாதுகாப்பு அதிகாரிகள் வாங்கி வைத்துக் கொண்டார்கள்.
ஆனால் பாலிவுட் நடிகர்கள் மட்டும் பிரதமருடன் செல்பி எடுத்திருக்கிறார்கள்.அது எப்படி சாத்தியமாகியது?
ம்ம்ம்ம் ..வாயைத் திறக்கக்கூடாது!”
இப்படியாக பதிவிட்டிருக்கிறார்.
எல்லா மாநில மக்களுக்கும் பொதுவானவர் என கருதப்படுகிறவர் பிரதமர்.
அவர் இப்படி நடந்து கொள்ளலாமா? எடுத்துக் கொண்ட உறுதி மொழிக்கு இதுதான் பலனா?