அப்படிப் போடு அறிவுக் கொழுந்தே!
என்னடா இவ்வளவு நாளாகியும் சேகரு அதாங்க நம்ம எஸ்.வி.சேகர் வண்டி ஒன்னும் கிரவுண்ட்டுக்கு வரலைன்னு பாத்தா…
வந்துருச்சு !
திருவள்ளுவர் இந்துவாம், அதுவும் ஜோதிடராம்.
நல்லவேளை ,கலைஞர் அய்யன் வள்ளுவர்னு சொன்னதை புடிச்சுக்கிட்டு “தமிழறிஞரே சொல்லிட்டாரு ‘அய்யர்’னு.அதனால அவர் ஒரு பிராமணர்னு சொல்லாமல் விட்டாரே.
அதாவது நம்ம தெக்கித்தி சீமைப் பக்கம் குறி சொல்றவங்களை வள்ளுவன் னு சொல்வாங்க.அத புடிச்சிக்கிட்டு காமடியா வள்ளுவரை கலாய்க்கிறாராம். அதான் இந்துன்னு சொல்லியிருக்கிறார்.
எந்த வித மத அடையாளமும் இல்லாத காலத்தை சேர்ந்தவர் வள்ளுவர். அவர் எப்படி இந்து ஆவார்? எஸ்.வி.சேகர் தனது டிவிட்டர் பக்கத்தில் இப்படி எழுதி இருக்கிறார்.
வள்ளுவர் இறை நம்பிக்கை உடைய ஒரு இந்து ஜோதிடர். விரைவில் அதுவும் நிரூபிக்கப்படும். “வள்ளுவன் வாக்கு”