இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மீடியாக்களிடம் நெருங்கிக் கொண்டிருக்கிறார் நயன்தாரா!
மீடியாக்கள் தன்னுடைய பேட்டிகளை திரித்துக் கூறுவதால்தான் மீடியாக்களை விட்டு விலகி இருப்பதாக நயன்தாரா சொல்லியிருந்தார். அதன் பிறகு தற்போது ஒரு வானொலிப் பேட்டி வெளியாகி இருக்கிறது.அதில் கஜினியை மட்டம் தட்டி இருக்கிறார்.
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் சூப்பர் டூப்பர் ஹிட் கஜினி.
இந்த படத்தில் சூர்யா கதாநாயகன். இரண்டு ஹீரோயின்கள். அசின்,அன்றைய காலகட்டத்தில் முன்னணி கதாநாயகி.
நயன்தாரா வளர்ந்து வந்த நாயகி.
இரண்டு நாயகிகளில் அசினின் கேரக்டருக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கதைப்படி இருந்தது. அது அவரது நிஜ வாழ்க்கையிலும் நடந்தது. அதாவது படத்தில் பிரபல செல்போன் கம்பெனி அதிபர் சூர்யாவை கல்யாணம் செய்வது மாதிரி இருக்கும் . தற்போது அவர் செல்போன் கம்பெனி அதிபரின் மனைவிதானே!.
நயன்தாராதான் கஜினியைப் பற்றிய ரகசியத்தை கண்டு பிடிப்பார்.
ஆனால் அவ்வளவாக பேசப்படவில்லை. இதனால்தானோ என்னவோ தன்னுடைய கேரியரில் மோசமான படம் கஜினி என்பதாக சொல்லியிருக்கிறார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்துவரும் தர்பார் படம் ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கம் என்பது குறிப்பிட்டது தகுந்தது.
தர்பாரில் கண்டிப்பாக ரஜினிக்குத்தான் முக்கியம் கொடுக்கப்பட்டிருக்கும். அதனால் தான் கஜினியை கிண்டுகிறாரோ!
இருக்கலாம்