புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் விக்ரம்-வேதா வெளியாகி வெற்றி பெற்றிருக்கிற படம்.!
இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி- மாதவன் இணைந்திருந்த படம்.
இந்த படத்தின் ரீமேக் உரிமையை இந்தி சூப்பர்ஸ்டார் ஆமீர்கான் வாங்கி இருக்கிறார்.
அதன் பின்னர்தான் பாலிவுட்டுக்கு தகுந்த மாதிரி படத்தை எடுக்க வேண்டும் என சொல்லி பல மாறுதல்களை சொல்லி இருக்கிறார். அதற்கான மாற்றங்களையும் சொல்லி இருக்கிறார்.
விஜய் சேதுபதியின் கேரக்டரில் ஆமிர்கானும் ,மாதவன் வேடத்தில் சையி ஃ ப் அலிகானும் நடிக்கிறார்கள். புஷ்கர்-காயத்ரி இயக்குகிறார்கள்.
தற்போது கதையை மாற்றும் வேலை நடக்கிறது. இந்தி கதை எழுத்தாளர்களுடன் இயக்குநர்கள் பேச்சு நடத்தி வருகிறார்கள்.தொட்டதுக்கெல்லாம் ஆமிர்கான் திருத்தம் சொல்லிவருவதால் கதையின் வேகம் குறைந்தால் என்ன செய்வது என்கிற கலக்கத்தில் இருக்கிறார்கள் இயக்குநர்கள்.
என்ன செய்வது ?தலையை கொடுத்தாகிவிட்டது.